10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

 
Exam

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் எந்தவித அவசரமும் இன்றி பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் முன்னதாகவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 1-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 4-ம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Election commission

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனால் பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம் ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Exam

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “பொதுத்தேர்வு அட்டவணைகள் குறித்த அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு தேதிகளைத் தவிர்த்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும் என நம்புகிறேன். ஏற்கனவே வெளியிடப்பட்ட 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.

From around the web