அண்ணன் அரசியல் செய்வானா? விஜய் க்கு மூத்த பத்திரிக்கையாளர் கேள்வி!!

 
shyam

புத்தாண்டை யொட்டி ஆகாயம் வாய்ஸ் சேனலுக்கு மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் பேட்டி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலை குறித்து விரிவாகப் பேசியுள்ளவர், தங்கை மீது பாலியல் வன்கொடுமை செய்தால் எந்த அண்ணன் அதை வைத்து அரசியல் செய்வான், அடிச்சு வெளுத்து வாங்கியிருக்க மாட்டானா? என்று விஜய் க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அதிமுக, பாஜக மட்டுமல்லாமல் தவெகவும் கையில் எடுத்துள்ளது. ஆளுநரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த விஜய், தன் கைப்பட தங்கைகளுக்கு என்று எழுதிய கடிதத்தை தவெகவினர் அச்சிட்டு வினியோகித்து வருகின்றனர். விஜய் யின் இந்த அரசியல் செயலை தராசு ஷ்யாம் விமர்சனம் செய்துள்ளார்.

எந்த அண்ணனும் தங்கைக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை வைத்து அரசியல் செய்ய மாட்டான். இவர் தங்கை என்று அழைத்தால் போதுமா. அவர்கள் இவரை அண்ணனாக ஏற்க வேண்டாமா? அந்தப் பொண்ணுக்கு ஏற்பட்ட அவலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி அரசியல் செய்கிறார்களே என்று தான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

நீதிமன்றம் கையிலெடுத்துள்ள இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக சார்பில் வழக்கறிஞர்களும் மனு தாக்கல் செய்து இணைந்துள்ளனர். விஜய் இதைக் கூட செய்யவில்லை. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை நீதிமன்றம் முடிவுக்கு விட்டுவிடுவதே சரியானதாக இருக்கும் என்றும் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்

From around the web