கைதாவாரா அமைச்சர் துரைமுருகன்? மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் பகீர் தகவல்!
அமலாக்கத் துறை சார்பில் மூத்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை நடைபெற்றது. இது ஆளுங்கட்சி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திடீரென்று அமலாக்கத்துறை ஏன் சோதனை நடத்தியது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் வலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது,
“2016ல் டிமானிடேஷன் 500, 1000 மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது அதை 200 ரூபாய்களாக மாற்றிய குற்றச்சாட்டு தொடர்பான சோதனையாக இது இருக்கலாம். அல்லது,தமிழ்நாட்டில் மணல் குவாரி நடத்துவது தொடர்பான முறைகேடு தொடர்பாகவும் இருக்கலாம்.
துரைமுருகனோ, கதிர் ஆனந்தோ கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் அவர்களுக்கு கீழே செயல்பட்டவர்கள் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருப்பதால் இப்போது இருந்தே வழக்குகளை தயார் பண்ணும் எண்ணமாகவும் இருக்கலாம்” என்று தராசு ஷ்யாம் கூறியிருக்கிறார்.
முதலமைச்சரை துரைமுருகன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சோதனை மிகவும் கவனத்துடன் திட்டமிடலுடன் நடத்தப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கைது போல் இப்போது கைது நடக்க வாய்ப்பில்லை என்பதால் பெரிய பரபரப்பு ஏற்படவில்லை. இது குறித்து அரசியல் அறிக்கை வருகிறதா என்று பார்க்க வேண்டும். 2019ல் கதிர் ஆனந்திடம் பிடிபட்ட பணம் பற்றி இந்த நடவடிக்கையா என்பதை தெரிந்து கொண்ட பின்னரே, அடுத்து இது எப்படிச் செல்லும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்றும் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.