அண்ணாமலை பதவி தப்புமா? அதிமுக - பாஜக கூட்டணி அமையுமா?

 
Annamalai

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவுக்கு வருகிறது. ஒருவர் இரண்டு தடவை தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம் என்பது பாஜகவின் விதிமுறை ஆகும்.

அந்த வகையில் இந்தியா முழுவதும் பாஜக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடை பெற உள்ளது. அந்தமான் பாஜக தேர்தல் பார்வையாளராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவது பாஜக தலைவர்கள் மாற்றம் இருக்கும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவிகளை துறந்து விட்டு பாராளுமன்றத் தேர்தலில் தோற்று, கட்சிப் பொறுப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தமிழிசை. தொடக்கம் முதலாகவே அதிமுகவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அண்ணாமலை தற்போது யூடர்ன் அடித்து அதிமுகவை பாராட்டத் தொடங்கியுள்ளார். ஆனால் அதிமுகவினர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை மன்னிக்கத் தயாராக இல்லை. அண்ணாமலை கூட தான் பிரச்சனை பாஜக கூட அல்ல என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளார்.

அண்ணாமலை இல்லாத பாஜ்கவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு தயக்கம் இல்லை என்றே தெரிகிறது, அவருடன் இணக்கமாக செல்லக்கூடிய தலைவர் என்றால் அனுபவம் வாய்ந்த தமிழிசையே முதலிடத்தில் இருக்கிறார். வானதி சீனிவாசன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் எடப்பாடிக்கு உடன்பாடு இருக்க வாய்ப்பில்லை.

அண்ணாமலை மாற்றப்பட்டு தமிழிசை தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், 2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி என்று அடித்துச் சொல்லலாம்!

From around the web