மனைவி கள்ளத்தொடர்பு.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் தலையை வெட்டிய கணவன்.. தென்காசியில் கொடூர கொலை!

ஊத்துமலை அருகே மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒருவரை கொலை வெறி தாக்குதலோடு கொடூரமாக தலையை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் குண்டன் என்ற சுப்பிரமணியன். இவரது மகன் வேலுச்சாமி (32). இவரது மனைவி இசக்கியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதை மனைவி ஏற்காத நிலையில் இருவருக்கும் இடையிலான கள்ளக்காதல் தொடர்ந்தாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் சண்டை ஏற்படவே மனைவி இசக்கியம்மாள் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கண்ணாடிகுளம் கிராமத்தில் இருந்து ருக்குமணியம்மாள்புரம் செல்லும் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கள்ளக்காதலன் முருகனிடம் வேலுச்சாமி சென்று என் மனைவி இசக்கியம்மாளுடன் தகாத உறவு இருப்பதாக கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த இளநீர்வெட்டும் அருவாளை எடுத்து முருகனின் தலையை திருவிழாக்களில் ஆடை வெட்டுவது போல ஒரே வெட்டாக தலையை வெட்டியாதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனின் தலையை எடுத்து மனைவி ஊரான கயத்தாறு அருகே உள்ள புதுக்குடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலேயே தலையை கொண்டு சென்று மனைவியிடம் உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார் என்று கூறியுள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த இசக்கியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார் வேலுச்சாமி கைது செய்து முருகனின் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைச் சம்பவம் தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் சரகத்திற்கு உட்பட்டதால் போலீசார் குற்றவாளியான வேலுச்சாமியை கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம் 294(b),302,506 (ii),ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியிடம் கள்ள உறவு வைத்திருந்த ஒருவரை கொலை வெறி தாக்குதலோடு கொடூரமாக தலையை வெட்டிய சம்பவம் தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது