பொல்லாத அதிமுக நிர்வாகி... பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. வழக்கில் தொடர்புடைய 9 பேருக்கும் சாகும் வரையிலும் சிறை என்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) May 13, 2025
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! https://t.co/lG3uWR7yYp