அதிமுகவுக்கு திடீர் பாராட்டு ஏன்? அண்ணாமலை பற்றி பிரபல பத்திரிக்கையாளர் தகவல்!!

 
Annamalai

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு அரசைக் கண்டித்து எந்த சார் என்று கேள்வியை எழுப்பும் வகையில் நூதனப் போராட்டம் ஒன்றை அதிமுக ஐடி விங் தரப்பில் செய்திருந்தனர். இதைப் பாராட்டி அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதிமுகவை ஊழல் கட்சி என்றும் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றும் கூறியிருந்த அண்ணாமலை ஏன் திடீரென்று அதிமுகவை ஆதரிக்கிறார் என்று அரசியல் களத்தில் ஆச்சரியங்கள் ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமியின் மகனை அண்ணாமலை சந்தித்ததாகவும் , நாமெல்லாம் கவுண்டர்கள். அப்பாவை இந்த ஒரு தடவை மன்னித்து விடச் சொல்லுங்கள் கேட்டதாகவும் பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவுகளில் கூறியிருப்பதாவது,

”ஆடுமலை எடப்பாடி மகன் கோவையில் சந்திப்பு.நாம கவுண்டர்கள் ஒரு தடவை அப்பாவை மன்னிக்க சொல்என கெஞ்சல்.நாங்க மன்னிச்சாலும் நீங்க ஜெவை ஊழல் குற்றவாளி என பேசியதை அதிமுக மன்னிக்காது எனமிதுன் பதில்! தொடர்ந்து கெஞ்சல்!ஜாதி ஜெயிக்குமா? அம்மா ஜெ ஜெயிப்பாரா?” என்று ஒரு பதிவிலும், ”ஜெ சமாதியில் போய் மன்னிப்பு கேட்க போகிறார் ஆடுமலை! நீ என்ன செய்வியோ தெரியாது மாநில தலைவர் பதவியில் நீடிக்கவேண்டுமென்றால் அதிமுக உன்னை ஏற்க வேண்டும் என பாஜகவின் தேசிய தலைமையும்,அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது முட்டாள்தனம் என மாநில சீனியர்களும் சொல்லிவிட்டார்களாம்” என்று மற்றொரு பதிவிலும் தாமோதரன் பிரகாஷ் கூறியுள்ளார்.


மாநிலத்தலைவராக நீடிப்பதற்கு அதிமுகவின் ஆதரவு தேவை என்பதால் தான் அதிமுகவினரின் போராட்டத்தை அண்ணாமலை ஆதரித்து பதிவிட்டுள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web