இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல.. கிண்டல் செய்த சக ஆசிரியர்கள்... விபரீத முடிவு எடுத்த உடற்கல்வி ஆசிரியர்!!

 
pudukottai

புதுக்கோட்டையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியை எலிமருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி (40). இவர் புதுக்கோட்டை இராணியர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். ரேவதியின் உடன்பிறந்தவர்களுக்கு திருமணமான நிலையில் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக ரேவதியுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் 40 வயதாகியும் ஏன் இன்னும் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை எனக் கேட்டு கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.

rat

இதன் காரணமாக மன் உளைச்சலில் இருந்த ரேவதி பணிக்கு செல்ல பிடிக்கவில்லை என பெற்றோரிடம் கூறி விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி காலை உணவு சாப்பிட்ட ரேவதி, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். ரேவதிக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்த பெற்றோர்கள் ஆட்டோவில் அழைத்துச் சென்று அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் ரேவதியிடம் பெற்றோர் விசாரித்தபோது, எல்லோரும் ஏன் திருமணமாகவில்லை என கேட்டு கேலி கிண்டல் செய்வதாகவும், இதனால் மனமுடைந்த நான் ஆன்லைன் மூலம் எலி மருந்து ஆர்டர் செய்து, அதை உணவில் கலந்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ரேவதியை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் ரேவதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 9-ம் தேதி ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

pudukottai

இதையடுத்து ரேவதியின் தந்தை மாணிக்கம் தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் போரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 40 வயதாகியும் திருமணமாகவில்லை என சக ஆசிரியர்கள் கேலி கிண்டல் செய்ததால் ஆசிரியை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web