விஜய் வாய் திறக்கவில்லையே ஏன்? மூத்த பத்திரிக்கையாளர் கேள்வி!!

 
விஜய் 5 கோடி வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான்.. விளக்கும் வருமான வரித்துறை!

பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. பொதுமக்களும், திமுக, திக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் பெரியார் ஆதரவு இயக்கங்களும் கடும் கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.

பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர் என்று கூறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இது குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளார். விஜய் ஏன் வாய் திறக்கவில்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ் தளத்தில், ”வீடு எரிகிறது என்றால் சாக்கடை தண்ணீரை கூட ஊற்றுவோம் என்றார் குருமூர்த்தி.இப்போது பெரியாரை அசிங்கபடுத்த சீமான் என்கிற மனநோயாளியை பாஜக பயன்படுத்துகிறது.அது சரி பெரியாரை சீமான் அசிங்கபடுத்துவது பற்றி விஜய் வாய் திறக்கவில்லை?பாஜக சிக்னலா? கொள்கை தலைவர்!” என்று பதிவிட்டுள்ளார் தாமோதரன் பிரகாஷ். அந்தப் பதிவில் பாஜக தலைவர் எச்.ராஜா, உண்மையான மனநோயாளியே  சீமான் தான் என்று பேசும் வீடியோவையும் அவர் இணைத்துள்ளார் 


 

From around the web