விஜய் க்குப் பின்னால் ஒன்றிய அரசு அதிகாரி? திருச்சி சூர்யா பரபரப்பு தகவல்!!
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஒன்றிய அரசின் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவர் செயல்படுகிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை திருச்சி சூர்யா கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் விஜய் மற்றும் இன்னொருவர் படத்தை இணைத்து பதிவிட்டுள்ள திருச்சி சூர்யா,
”தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன. ஒருவர் 2016ல் *மாற்றம் முன்னேற்றம் அன்புமணி* என்று பாமகவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமி. தொண்டர்களுக்கு தெரியவில்லை என்றாலும் அரசியல் விமர்சகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இவர்தான் அவருக்கு வேலை செய்கிறார் என்பது தெரியும்.
அறியாத ஒரு செய்தி இந்த ஜான் ஆரோக்கியசாமியை அழைத்து வந்தவர் தற்போது மத்திய அரசு பணியில் வருமானவரித்துறையில் துணை ஆணையராக இருக்கும் திரு அருண்ராஜ் IRS என்பது! மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர், ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தை எடுக்க வைத்தது இந்த அருண்ராஜ் IRS என்ற அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் பணி செய்வது மத்திய அரசிற்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் விஜய்க்கு நன்கு பரிட்சயமான இவரை அணுகி தான் ஜான் ஆரோக்கியசாமி தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசராக நியமிக்கப்பட்டு சுமார் 11 கோடி ரூபாய் வரை வாங்கி இருக்கிறார் என்ற செய்தியும் நமக்கு வந்துள்ளது.
நடிகர் விஜய் களத்திற்கு வராமல் பனையூர் அரசியல் செய்வதற்கு மிக முக்கியமான காரணமானவர்கள் இந்த இருவர்தான் என்று தவெக நிர்வாகிகளே புலம்புகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததற்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் காரணம் என்று தெரிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறாரா ?*
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) January 6, 2025
தமிழக வெற்றி கழகத்தில் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசர்களாக இருவர் இருப்பதாக செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
ஒருவர் 2016ல் *மாற்றம் முன்னேற்றம் அன்புமணி* என்று… pic.twitter.com/U7Jjp2Hivh