யாருக்கெல்லாம் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை?
Dec 13, 2024, 07:34 IST
தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ஆகும். தென்காசி, திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.