ரஃபேல் வாட்ச் எங்கேண்ணே? அண்ணாமலைக்கு திருச்சி சூர்யாவின் அடுத்த கேள்வி!!

 
Annamalai

சாட்டையடி மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலையை சமூக ஊடகங்களில் பலவாறு பேசிவருகிறார்கள். அண்ணாமலையை நோக்கி அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை வீசி வரும் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவும், விக்கிரமாதித்தனிடம் கேட்கும் வேதாளம் போல் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்தன் போல் அண்ணாமலை பதில் சொல்லவில்லை.

இன்று அண்ணாமலையை நோக்கி 10வது கேள்வியை எழுப்பியுள்ளார் திருச்சி சூர்யா.

”அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் கேள்வி எண் 10 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க, உங்களோட பித்தலாட்டத்துக்கு ரஃபேல் வாட்ச் பில்லே சாட்சி. கையில் எழுதுன பில்லு, ரொக்க பணமாக ₹3.0 லட்சம் கொடுத்து பழைய வாட்ச்ச வாங்குன பிராடு நீங்கதாண்ணே! ரஃபேல் வாட்ச் என்னோட தேசபற்றின் அடையாளம் நான் சாகும் வரை அணிவேன் என புருடா விட்டியேண்ணே, இப்ப அந்த வாட்ச் எங்கண்ணே?

சொன்ன வார்த்தையை என்றுமே காப்பாற்ற முடியாத ஆளுதானே நீ. அந்த வாட்ச் வாங்கி கொடுத்வர் பெயர் சேரலாதன், அவருடைய Crimson Dawn வீட்டில்தான் 2019 முதல் சில வருடம் குடியிருந்தீர்கள். நல்ல அறிமுகம் உள்ள நபரிடம் இருந்து எதற்காக ரொக்க பணம் கொடுத்து, ரசீது போட்டு பழைய வாட்ச் வாங்கினீர்கள்?

உங்களுக்கு வீடு கொடுத்து, வாட்ச் கொடுத்த பிறகு மும்பை நிறுவனம் உள்பட மூன்று புதிய நிறுவனங்கள் தொடங்கி உள்ளார் சேரலாதன். சமீபத்தில் அவர் தொடர்புடைய இடங்களிலும் ஐடி ரெய்டு நடந்துள்ளது… இந்த ரெய்டு காய்ச்சும் உங்களுக்கும் இந்த ரெய்டுக்கும் சம்பந்தம் இருக்குதுன்னு ஒத்துக்குவீங்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் திருச்சி சூர்யா


 


 

From around the web