பில்டிங் திறந்ததும் கல்யாணம்.... பொண்ணை அறிவித்த நடிகர் விஷால்!!
May 20, 2025, 09:27 IST
நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் உள்ளது. திறப்பு விழா முடிந்ததும் கல்யாணம் தான் என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார். மேலும் நடிகை தன்ஷிகாவை திருமணம் செய்யப்போவதாகவும் யோகி டா பட விழாவில் கூறியுள்ளார் விஷால்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்தார் தன்ஷிகா. கபாலி படத்தில் யோகி என்ற வேடத்தில் தன்ஷிகா நடித்திருந்தார். தற்போது ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த படம் யோகி டா.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.நடிகர் சங்க கட்டிடத்தை ஆகஸ்டு 15ம் தேதி திறக்கவுள்ளதாகவும் ஆகஸ்டு 29ம் தேதி விஷாலின் பிறந்தநாளன்று தன்ஷிகாவுடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.
