அதிமுக எப்ப அமித்ஷா திமுகவா மாறிச்சு? ஓ.பி.எஸ் ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

அதிமுக எப்போ அமித்ஷா திமுகவா மாறிச்சு என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் சேர்வதற்குத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதோடு நிற்காமல், 2021ம் ஆண்டு தேர்தலின் போது அமித்ஷா எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எங்களை சேர்த்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றாக நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்தை மட்டும் ஓபிஎஸ் சொல்லியிருந்தால் அது உண்மையான அதிமுக தொண்டரின், தலைவரின் கருத்தாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் அமித்ஷா சொன்னார் இபிஎஸ் கேட்கவில்லை என்று சொல்லியிருப்பது, இன்னமும் ஓபிஎஸ் ஐ பாஜக தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டியுள்ளது.
அதிமுக தொண்டர்களோ, ஓபிஎஸ் தான் கட்சி உடைவதற்கு காரணமாக இருந்தார். சசிகலா திட்டப்படி நடந்திருந்தால், அதிமுக பாஜகவிடம் கையேந்தும் நிலைக்கே போயிருக்காது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த அதிமுகவை பாஜக எதுவும் செய்திருக்க முடியாது. பதவி ஆசையால் பாஜகவினருடன் சேர்ந்து ஓ.பி.எஸ் தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் சிக்கல்களை உருவாக்கினார். அது இப்போது கட்சிக்கு பெரும் ஆபத்தாக வந்துள்ளது என்று கூறுகிறார்கள்.