வாட் ப்ரோ... வெரி ராங் ப்ரோ... நடிகர் விஜய் க்கு தவெக முன்னாள் நிர்வாகி கேள்வி!!

 
Vijay

நடிகர் விஜய் கட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டு தான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள்ளாகவே கட்சிக்குள் பணம் இருப்பவர்களுக்குத் தான் பதவி என்று கட்சியில் சேர்ந்த முன்னாள் விஜய் ரசிகர்கள் தொடங்கி, சமூகத்தள செயற்பாட்டாளார்கள் வரையிலும் பல்வேறு புகார்கள் வெளிப்படையாக வந்து கொண்டிருக்கிறது. பலர் கட்சியிலிருந்து விலகியும் வருகின்றனர்.

தவெக வில் இணைந்த சமூக செயற்பாட்டாளர் இளம் பெண் வைஷ்ணவி, ஏப்ரல் மாதம் வரையிலும் விஜய்க்கு தீவிரமாக ஆதரவாக செயல்பட்டு வந்தார். சொந்த ஊரான கோவை மாவட்ட நிர்வாகிகள் மீதான அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தும் இருந்தார். இந்நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வைஷ்ணவி.

சென்னையில் நடைபெற்ற தீ விபத்து சம்பவம் தொடர்பான நிகழ்வில் தவெகவினர் தாக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வைஷ்ணவி, 

”உங்கள் கட்சியை சேர்ந்த மகளிர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றவுடன் நீங்கள் ஒரு கட்சித் தலைவராக கண்டனம் தெரிவித்துள்ளீர்கள். சிறப்பு!! ஆனால் என்னை கடந்த ஒரு மாத காலமாக உங்கள் கட்சித் தொண்டர்கள் மிக ஆபாசமான வார்தைகளாலும் தரக்குறைவாகவும் வசைப்பாடுகிறார்கள், அதை கண்டித்து தாங்கள் ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை!? உங்கள் கட்சி பெண்களை மற்றவர்கள் தாக்கினால் மட்டும் தான் கண்டனமா… உங்கள் கட்சி அல்லாத பெண்களை உங்கள் கட்சிக்கார்ர்கள் தாக்கினால் அப்பொழுது நீங்கள் கட்சித் தலைவராக கண்டனம் தெரிவிக்க மாட்டீர்களா விஜய்?

உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!? What bro very wrong bro!!” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web