பாசிசம் என்றால் என்ன? நடிகர் விஜய் க்கு பாடம் எடுக்கும் பத்திரிக்கையாளர் பிரகாஷ்!!

 
Palestine

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பாஜகவையும் திமுகவையும் எதிர்ப்பதாக தெரிவித்து ஒன்றிய அரசு செய்வது பாசிசம் என்றால் மாநில அரசு செய்வது என்ன பாயசமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பாசிசத்தையும் பாயாசத்தையும் ஒப்பிட்டுப் பேசிய விஜய் க்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. அடிப்படை அரசியலே தெரியவில்லை என்ற விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இஸ்ரேல் போரினால் உணவுப் பஞ்சத்தால் பாலஸ்தீன மக்களின் பரிதவிக்கும் வீடியோ காட்சிய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ், “பாசிசம் என்றால் என்ன? அதை பாயாசத்துடன் ஒப்பிட்டார் ஒரு நடிகர்.இன்று இஸ்ரேலின் பாசிசத்தால் நடத்தபடும் போரினால் கற்பனை செய்ய முடியாத உணவு பஞ்சத்தால் பாலஸ்தீன மக்கள் பரி தவிக்கிறார்கள்.அது தான் இந்த கோரமான வீடியோ!தொண்டு நிறுவனங்கள் சமைத்து தரும் உணவுக்காக தான் இந்த கஷ்டம்!Food ???” என்று விஜய் யின் பாசிசம் - பாயாசம் ஒப்பீட்டை விமர்சித்துள்ளார்.