அமுதா ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களை சந்திப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பிரச்சனை? அவருடைய பதவி என்னன்னு தெரியுமா சார்?
இரண்டு நாட்களாக கரூர் சம்பவத்திற்கு திமுக அரசு தான் காரணம் என்று கூறிக்கொண்டும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடிரென்று அரசு உயர் அதிகாரிகள் மீது சாடத் தொடங்கியுள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளராகவும் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எக்கச்சக்கமான எரிச்சலைத் தந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு உடனடியாக பதிலடி தந்துள்ளார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
அரசு தரப்பிலிருந்து முக்கிய தகவல்களை செய்தியாளர்களுக்கு உரிய ஆதாரங்களுடன் நேர்த்தியாகத் தருவதற்காகவே ஊடகத்துறையை உருவாக்கியுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. ஊடகச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா இருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் நடைபெற்ற போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி உரிய விளக்கம் தந்தவரு இதே அமுதா ஐ.ஏ.எஸ் அதிகாரி தான்.
கரூர் சம்பவத்தில் அரசைக் குற்றம் சாட்டி சமூகத்தளத்தில் பல்வேறு கேள்விகள் எழுபப்பட்டு வந்ததால். அந்த கேள்விகளுக்கு விளக்கம் தரும் வகையில் வீடியோ படங்களுடன் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காட்டப்பட்ட வீடியோ ஆதாரங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் அவதூறு குற்றச்சாட்டுகளும் அம்பலப்பட்டு விட்டது. அந்த வேகத்தில் தான் அரசு அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று தெரிகிறது.
