என்னாச்சு ராமதாஸ்க்கு..? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. பாமக சொன்ன பரபரப்பு தகவல்!

 
Ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாமக நிறுவனர் ராமதாஸ் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. அதன்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ராமதாஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Apollo Hospital

ஆனால், ராமதாஸ் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ramadoss

2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம் என்றும் அதுபோல் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் முடிந்தவுடன் ராமதாஸ் இன்றே வீடு திரும்புவார் என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

From around the web