மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

 
Vaiko

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, கடந்த மே மாதம் 25-ம் தேதி திருநெல்வேலிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்று இருந்தார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

Apollo Hospital

ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வைகோ, பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார். 

வைகோவின் இடது தோளில் 3 இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன என்றும் அதை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்தால் தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்று வைகோவின் மகன் துரை வைகோ கூறியிருந்தார்.

Vaiko

இந்நிலையில் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற, இன்று காலை வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web