இது என்ன விளையாட்டு? ஆர்.பி.உதயகுமாருக்கு ஒ.பி.ரவிந்திரநாத் கேள்வி!!

 
Ravindranath-Kumar

செங்கோட்டையனின் கலகக்குரலை அடுத்து அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார். மேலும் செய்தியாளர்கள் ஓ.பி.ரவிந்திரநாத் பற்றி கேட்டபோது, யார் அவர்? கூகுளில் தேடிப்பார்த்துச் சொல்கிறேன் என்று நக்கலாகப் பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில் உதயகுமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஓ.பி.ரவிந்திரநாத். அதில், “முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே... நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்... இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி... நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 


 

From around the web