நெல்லையில் இருந்து திமுவுக்கு தொல்லை - கலைஞர் சொன்னது என்ன? தமிழிசை சொல்வது என்ன?

 
பதவி பசியால் எங்களுடனும் பேசி வருகிறார் முக ஸ்டாலின்! – தமிழிசை பகீர்

பேசுவது உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்காமல் அதிரடியாகப் பேசி வந்த முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மென்மையாகப் பேசக்கூடிய முதிர்சியுற்ற அரசியல் தலைவர். அதிமுக முன்னாள் அமைச்சர் என பண்பட்ட அரசியல்வாதியாகத் திகழ்ந்து வரும் நயினார் நாகேந்திரனுக்கு நெல்லையில் தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. அந்த மாவட்டத்தின் முக்குலத்தோர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்.

இந்நிலையில் புதிதாக தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் குறித்துப் பாராட்டி வரவேற்ற முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் முன்னாள் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்” நெல்லை திமுகவுக்குத் தொல்லை என்று கலைஞர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். நெல்லையிலிருந்து திமுகவுக்குத் தொல்லை தருவதற்கு நயினார் நாகேந்திரன் வந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் கலைஞர் குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு பெரும் ஆதரவு இல்லை என்ற பொருள்படும் “குமரி நமக்குத் தொல்லை நெல்லை நமது எல்லை” என்று தான் பேசியிருந்தார். நெல்லை மாவட்டத்தை தொல்லை என்று அவர் குறிப்பிட்டதே இல்லை. கலைஞர் சொன்னதாகத் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

From around the web