உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா? உதயநிதியை சாடிய அண்ணாமலை!!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடி உள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டி இருமொழிக் கொள்கை தான். பிரதமர் மோடி அவர்களே கடந்த முறை எங்கள் உரிமைகளைப் பறித்த போது கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டு மக்கள் துரத்தி அடித்தார்கள். இதை மீண்டும் முயற்சி செய்தால் இந்த முறை கோ பேக் மோடி கிடையாது கெட் அவுட் மோடி என்று சொல்லி உங்களை விரட்டி அடிப்பார்கள் என்று உதயநிதி பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கரூரில் நடைபெற்ற ஒன்றிய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாகச் சாடி உள்ளார்.
“உதயநிதிக்குச் சொல்கிறேன் நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாரு. உன் வாயிலிருந்து கெட் அவட் மோடின்னு சொல்லிப் பாரு. உனக்கு ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியல்ல. நீ கத்துக்குட்டி. காலையில் 11 மணிக்குத் தான் உன் மேலே வெயில் படும். நீ சூரியனை காலையில் பார்த்ததே கிடையாது. உச்சிக்கு வந்த பிறகு தான் பார்ப்பே.
பிரம்ம முகூர்த்தத்தில் 3.30 மணிக்கு எழுந்து யோகா பண்ணிட்டு பைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி பண்ணுகிற ஆளிடம் 11:30 மணிக்கு எந்திருக்கும் உனக்கு இவ்வளவு திமிர் இருந்தா, சாதாரண நடுத்தர மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.” என்று பேசியுள்ளார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷையும் அதே மேடையில் அண்ணாமலை சாடியுள்ளார்.