200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் பெறுவோம்!  விஜய் க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!!

 
Kanimozhi

நாடாளுமன்ற விவாத்ததில் பங்கேற்ற பிறகு தூத்துக்குடிக்கு வந்துள்ள கனிமொழி எம்.பி. நாள்தோறும் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். திருச்செந்தூர் கோவில் யானை மிதித்து இறந்த பாகனின் குடும்பத்தினரை சந்தித்து, பாகனின் மகளுக்கு அரசு உதவி அலுவலர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

பின்னர் கட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, “ இந்த தேர்தல் வெற்றி உங்கள் கரங்களிலே இருக்கிறது என்ற கடப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம். அண்ணன் தளபதி சொல்வது போல் 200 தொகுதிகளிலும் நிச்சயமாக நானும் சொல்கிறேன், இறுமாப்போடு சொல்கிறேன். வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம்” என்று கட்சிக்காரர்களிடம் பேசியுள்ளார்.

முன்னதாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய், “200 தொகுதிகளை வெல்வோம் என்று இறுமாப்புடன் கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று பேசியிருந்ததற்கு பதிலடி தரும் வகையில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளது குறிப்பிடத் தக்கது.

From around the web