கூட்டணி ஆட்சி அமைப்போம்... மீண்டும் ஓங்கி குரல் கொடுக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை மக்கள் தோற்கடிப்பார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசியுள்ளது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று கூறுகிறார். அவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னால் தோற்கடிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் தமிழ்நாடு மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்திருக்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், என்னுடைய செவியும் சிந்தையும் தமிழ்நாட்டின் மீதுதான் இருக்கிறது.
நீண்டகால அரசியல் அனுபவத்தில் கூறுகிறேன், தமிழக மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கூறுகிறேன், வரும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிய காத்திருக்கிறார்கள்.ண்டகால அரசியல் அனுபவத்தில் கூறுகிறேன், தமிழக மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கூறுகிறேன், வரும் சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிய காத்திருக்கிறார்கள்” என்று நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
முன்னதாக கூட்டணி அறிவிப்பின் போது பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. தேசிய ஜனநாயக் கட்சியின் கூட்ட்ணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதைத் தான் அப்படிச் சொன்னார் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். கூட்டணி ஆட்சி என்றால் கட்சியின் எதிர்காலமும் முடிந்துவிடும் என்பதை அதிமுக தொண்டர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்குப் பதில் எதிர்க்கட்சியாக இருந்தால் கட்சி காப்பாற்றப்படும் என்பதே பெரும்பான்மையான அதிமுக தொண்டர்களின் மனநிலையாக உள்ளது.