ஒன்றிய அமைச்சர் மிரட்டலுக்கு பயப்பட நாம் அதிமுக அல்ல! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய அரசு மிரட்டினால், பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
”புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டுகிறார். ஆனால், இவர் மிரட்டினால் பயப்பட நாம் அதிமுக அல்ல. திமுக. இங்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடக்கவில்லை. மு.க.ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்
மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்திய ஒன்றியம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது. பல தென்மாநிலத் தலைவர்கள் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.