வைரல் வீடியோ.. கஞ்சா போதையில் கட்டிப்பிடித்து உருண்ட மாணவர்கள்.. அரக்கோணத்தில் பரபரப்பு!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் வந்த 2 மாணவர்கள் தண்டவாளத்தில் கட்டிபிடித்து புரண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் மொத்தம் 8 நடைமேடைகள் உள்ளன. இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் இதில் அனைத்து நடைமேடைகளிலும் எப்போதும் பயணிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு நடைமேடை எண் ஐந்திற்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள், கஞ்சா போதையில் தண்டவாளத்தைக் கடக்க முடியாமல், உருண்டு பிரண்டு கொண்டு இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவர், அங்கு செல்லவிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் இருவர், அவர்களை மீட்டு நடைமேடைக்கு அழைத்து வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தலைக்கேறிய கஞ்சா போதை.. தண்டவாளத்தில் உருண்ட மாணவர்கள்.. வெளியான வைரல் வீடியோ#NewsTamil24x7 | #Arakkonam | #drugs | #students | #viralvideo | #railwaystation | #NewsTamil pic.twitter.com/Wxe0q1KgbF
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) December 13, 2023
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், மாணவர்களைக் கண்டித்து அவர்களை விரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையம் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.