விநாயகர் சதுர்த்தி விடுமுறை மாற்றம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
vinayagar chaturthi

விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறையை செப்டம்பர் 18-ம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

vinayagar chaturthi

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து, 18-ம் தேதிக்கு (திங்கள் கிழமை) மாற்றி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோவில்களின் தலைமை தெரிவித்திருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செப்டம்பர் 17, 2023 தேதியை விநாயகர் சதுர்த்திக்கான பொது விடுமுறை நாளாக 1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின் கீழ் அறிவித்தது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பல்வேறு கோவில் தலைவர்களின் அறிக்கையின்படி, விநாயகர் சதுர்த்தி 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை)க்குப் பதிலாக 18.09.2023 (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

GO

இதை பரிசீலித்த அரசு, 1881, பேச்சுவார்த்தைக்குட்பட்ட சட்டத்தின் கீழ், 17.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18.09.2023 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறையை மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி, பின்வரும் அறிவிப்பு 01.09.2023 தேதி கூடுதல் அரசாணையில் வெளியிடப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web