விழுப்புரம் மாவட்டத்திற்கு 10-ம் தேதி பொதுவிடுமுறை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
Vikravandi

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து,  விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 13-ம் தேதி நடைபெறவுள்ளது.

Election

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது, “விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே அந்த தொகுதிக்கு 10-ம் தேதியன்று பொது விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி அந்த தொகுதிக்குள் உள்ள அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் 10-ம் தேதியன்று மூடப்படும்.

Local-holiday

மேலும், விழுப்புரம் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணியாற்றும் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதியாக, அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 10-ம் தேதியன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளிக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

From around the web