வீடியோ போட்ட விஜய்... தலை தெறித்து ஓடிப் போகும் ரசிகர்கள்!!

 
விஜய் 5 கோடி வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான்.. விளக்கும் வருமான வரித்துறை! விஜய் 5 கோடி வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான்.. விளக்கும் வருமான வரித்துறை!

கரூர் துயரம் நடந்து முடிந்து மூன்று நாட்கள் முகத்தில் தாடியை ட்ரிம் செய்து விட்டு நீட்டாக வந்து சோகமாக டயலாக் பேசி விஜய் வெளியிட்ட் வீடியோவுக்கு அவருடைய ரசிகர்கள் தரப்பிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுயநலமிக்க, இதயமே இல்லாதவர். நல்லவர் என்ற இமேஜ் திரைப்படத்தில் மட்டுமே. அவரை இது வரையிலும் நேசித்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று லியோபாய் என்ற எக்ஸ் தள ஐடியில் ஒருவர் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் தன்னுடைய கட்சியினரை உதவுங்கள் என்று கூட சொல்லவில்லை. அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை என்ற ரீதியில் மிகவும் தாழ்வான மனநிலையில் பேசியிருக்கிறார். மிகுந்த ஏமாற்றம். இது வரையிலும் அவருக்கு ரசிகராக இருந்தேன், இந்த சம்பவம் மாற்றிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மீது மதிப்பு கொண்ட திமுக எதிர்ப்பு மன நிலை கொண்ட ரசிகர்கள் கூட அவரை விட்டு விலகிச் செல்வது தெரிகிறது. இதையெல்லாம் தெரிந்து இனிமேலாவது தன்னை மாற்றிக் கொள்வாரா விஜய்?


 

From around the web