சீமானுக்கு எதிராக விஜயலட்சுமியிடம் 700 ஆதாரங்கள்!! பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர் பிரகாஷ்!!

 
Vijayalakshmi

நடிகை விஜயலட்சுமி - சீமான் பாலியல் வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் இருவரிடமும் போலீசார் முதல்கட்ட விசாரணை செய்து முடித்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளதாகவும் அதையெல்லாம் சட்டப்படி ஆவணப்படுத்துவதாகவும் தெரிகிறது. விஜயலட்சுமியே வழக்கை வாபஸ் பெற்றாலும் இந்த வழக்கை போலீசார் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியதால் போலீஸ் தரப்பில் கூடுதல் கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றத்தை சீமான் தரப்பில் நாடியுள்ளதாக டெல்லி பத்திரிக்கையாளர் நிரஞ்சன் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ், பழைய வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "இது அதிமுக ஆட்சியில் விஜயலட்சுமி வழக்கிலிருந்து தப்பிக்க சீமான் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ஜெ வை புகழ்ந்த போது வெளிவந்த கானொளி.அதில் சீமானுக்கெதிராக அவர் நம்பவைத்து எப்படியெல்லாம் ஏமாற்றினார் என எழுநூறு ஆதாரங்கள் இருப்பதாக கூறினார்.அது தற்போது அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் செய்தியாளரிடம் பேசிய விஜயலட்சுமி ஜெயிலில் இருந்து சீமான் எழுதிய கடிதங்கள், காதலர் தினத்தில் எங்கள் வீட்டுக்கு வந்தது உள்பட 700 ஆதாரங்கள் இருப்பதாகவும், அதையெல்லாம நினைவாகத்தான் வைத்திருந்தேன் ஆனால் இப்படி வழக்குக்கு உதவியாகும் என்று நினைத்ததே இல்லை என்றும் கூறியுள்ளார். ஏன் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. பாராட்டு விழா எடுத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

மூத்த பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூகத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


 

From around the web