விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.. விருப்பமனு விறுவிறு

 
DMDK

தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 20) முதல் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது.

Vijaya-Prabhakaran

இந்தநிலையில், மத்திய சென்னை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி ஆகிய  5 தொகுதிகளை தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது. தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதிஷ் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது மாணிக்கம் தாக்கூர் காங்கிரஸ் எம்பியாக உள்ளார். இவர் 4,70,883 வாக்குகளை பெற்று வென்றார். இங்கே கடந்த முறை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அதிமுக - பாஜக கூட்டணியில் 3,16,329 வாக்குகளை பெற்றார்.  

Vijaya Prabakaran

இங்கே தேமுதிக நல்ல வாக்கு வங்கியை பெற்றுள்ளதால் தற்போது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக சார்ப்பில் இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web