பிரசாந்த் கிஷோரால் விஜய் க்கு வெற்றி கிடைக்காது! கார்த்திக் சிதம்பரம் அதிரடி

பஞ்ச் டயலாக்கால் அரசியலில் வெற்றி பெற முடியாது. மேடைக்கு ரீல் போடுவதற்குத் தான் அது சரிப்படும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் தவெக வுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. கன்சல்டண்ட் ஆக இருக்கிறாரா என்ற் அந்தக் கட்சி தான் தெளிவு படுத்த முடியும் 1996ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். தேர்தல் வியூக அமைப்பாளர்களால் ஒரு தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியாது. பிரசாந்த் கிஷோரால் அவருடைய கட்சியையே வெற்றி பெற வைக்க முடியவில்லையே.
தேர்தல் அரசியலில் மக்களுக்கான திட்டங்கள் என்ன என்பதை முன் வைத்து போட்டியிடவேண்டும். பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் மேடைக்கும் ரீல்ஸ் போடுவதற்கும் தான் பயன்படும். அரசியலில் வெற்றி பெற அதெல்லாம் பிரயோசனம் இல்லை என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சிதம்பரம்.