ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் விஜய்?

குடியரசு நாள் கொண்டாட்டத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக, பாஜக, பாமக உள்பட தவெக வுக்கும் இந்த தடவை அழைப்பு அனுப்பட்டுள்ளது.
அதிமுக, பாஜக, பாமக சார்பில் பங்கேற்பது உறுதி எனத் தெரிகிறது. திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. ஆளுநரை சந்தித்து அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்திற்காக மனுகொடுத்த தவெக தலைவர் நடிகர் விஜய் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக தரப்பில் விஜய் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பதவி தேவையில்லை என தன் கட்சியின் கொள்கையாக வைத்து விட்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றால், அது முரணாக இருக்கும் என்று விஜய் கருதுவதாகத் தெரிகிறது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்திற்காக சந்தித்த போதும் இதைச் சுட்டிக்காட்டி சமூகத்தளங்களில் நடிகர் விஜய் யை கலாய்த்தனர். அதனால் இந்த தடவை கவனமாக இருக்கிறார் போலிருக்கு!