தலைவர் விஜய் சாய்பாபா கோவிலில் தரிசனம்.. தவெக பொதுச்செயலாளர் பதிவால் பரபரப்பு

 
Vijay

நடிகர் விஜய் துபாயில் உள்ள சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Vijay

‘கோட்’ படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் துபாய் சென்றுள்ளார். அங்கு சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறார் விஜய். இந்தப் புகைப்படத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த பலரும் விஜய் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இது தேவையில்லாத விஷயம் என விஜய் தரப்பில் கடிந்து கொண்டதால் இந்தப் படம் உடனே நீக்கப்பட்டு இருக்கிறது.

TVK

தேர்தலுக்கு முன்பே துபாயில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் திரும்புவார் என்றும் தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு நடிகர் விஜய், ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கடுத்து முழு நேரமாக அரசியல் பணியில் ஈடுபட இருக்கிறார் விஜய்.

From around the web