விஜயகாந்த் வழியில் விஜய்? மதுரையில் தவெக முதல் மாநில மாநாடு!!

 
விஜய் படத்திற்கு இது தான் டைட்டிலாம்..??

வொர்க் ஃப்ரம் ஹோம் என்று விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதியுமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மே 15ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகிகள் தேர்வு முடிவடைந்த நிலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார். சினிமாவில் விஜயகாந்த் நடிகர் விஜய் யின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். விஜய்க்காக விஜயகாந்த் நடித்துக் கொடுத்த செந்தூரப்பாண்டி திரைப்படத்திற்குப் பிறகே விஜய்க்கு மார்க்கெட் தொடங்கியது.

விஜயகாந்த கட்சி தொடங்கிய போது மதுரை திருநகரில் தான் முதல் மாநாட்டை நடத்தினார். அவர் வழியில் நடிகர் விஜய் யும் தனது கட்சியின் மாநாட்டை மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

From around the web