பெயரை மறந்த விஜய்.. சென்னை ஆர்ப்பாட்டத்தில் சொன்னது என்ன?
சிவகங்கை அருகே இளைஞர் அஜித்குமார் போலீசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார்.மேலும் உடனடியாக சி.பி.ஐக்கு வழக்கை மாற்றியும் உத்தரவிட்டார்.
எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம் சாட்டி, போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.
சாரி வேண்டாம் நீதி வேண்டும் என்ற பதாகைகளுடன் நடத்திய போராட்டத்தில், “ அஜித்குமார் குடும்பத்திற்கு சாரி சொன்னீர்களே. போலீசார் கஸ்டடியில் உயிரிழந்த மற்ற 24 பேரின் குடும்பத்தினருக்கு சாரி சொன்னீர்களா? ”என்று முரண்பட்ட கேள்வியை எழுப்பியுள்ளார் விஜய். நெட்டிசன்கள் இதை கலாய்த்து வருகின்றனர்.
மேலும், சாத்தான்குளத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் பற்றி குறிப்பிட்டுப் பேசிய விஜய், பெயரை தவறுதலாகக் கூறியுள்ளார். ஜெயராஜ் என்பதற்குப் பதிலாக ஜெபராஜ் என்று தவறாகப் பெயரைக் குறிப்பிட்ட நடிகர் விஜய் யை விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எதெ ஜெபராஜ் பெனிக்சா? டேய் அவரு பேரு ஜெபராஜ் இல்ல ஜெயராஜ்.. தமிழ்நாடு முழுக்க பேசப்பட்ட ஒரு லாக்கப் டெத் கேஸ்தான் ஜெயராஜ் பெனிக்ஸ். அந்த பேரே உனக்கு தெரியல.. நீதான் முதல்வரா வந்து தமிழ்நாட்ட பொரட்டிப்போட போறியா? கெரகம்டா.. முதல்ல கேஸ் டீட்டெய்ல படிச்சிட்டு வா போ @TVKVijayHQ pic.twitter.com/33pjfsaeFC
— U2 Brutus (@U2Brutus_off) July 13, 2025
