ரஜினியின் ஆட்டோ,  கப்பல் கேட்ட விஜய்.. பிகில்  கிடைக்குமா? ரசிகர்கள் ஆர்வம்!!

 
‘பிகில்’… இதானுங்க நம்ம விஜய் 63! #Bigil ‘பிகில்’… இதானுங்க நம்ம விஜய் 63! #Bigil

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னத்திற்கான மனு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் தேர்வு செய்துள்ள கப்பல், ஆட்டோ, விசில் கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட சின்னங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தவெக தொண்டர்களாக மாறியுள்ள விஜய் ரசிகர்கள், கட்சிக்கு என்ன சின்ன கிடைக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். ஆட்டோ என்றால் அது ரஜினியின் பாட்ஷா படமாச்சே?. கப்பல் சின்னம் எப்படி செட்டாகும்? என்ற குழப்பத்தில் உள்ள ரசிகர்கள் விசில் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார்களாம்.

விஜய் நடித்த பிகில் படம் பெரிய வெற்றி பெற்றதல்லவா. அந்த செண்டிமெண்டில் கட்சி ஜெயிச்சிடும் என நம்புகிறார்களாம். விசில் சின்னம் கிடைத்தால்  பிகிலு பிகிலு ன்னு தான் பிரச்சாரம் செய்வார்களோ?

From around the web