மூத்த காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்!
உடல் நலக்குறைவால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகன் திருமகன் ஈ.வெ.ரா வுடைய மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவருடைய மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினர்களும் முக்கியத் தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அவருடைய உடல் காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. நாளை ராமாபுரத்தில் இ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.