காவலர்கள் தாக்கியதால் வேன் ஓட்டுநர் பலி.. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கடும் கண்டனம்

 
SankaranKovil

சங்கரன்கோவிலில் காவலர்கள் தாக்கியதால் வேன் ஓட்டுநர் இறந்ததாக கூறி அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் முருகன் (37). வேன் ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் மாலையில் அச்சம்பட்டி கிராமத்து மக்களை மகா சிவராத்திரியை முன்னிட்டு வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்ச பூதஸ்தலங்களில் ஒன்றான சங்கரன்கோவிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சங்கரன்கோவில் நகரப் பகுதியில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேனில் உள்ள பொதுமக்களை இறக்கிவிட்டு வேன் ஓட்டுநர் முருகனுடன் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு வேனை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

உடனடியாக அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு சென்றனர் அப்போது போலீசாரிடம் டிரைவர் முருகனை எங்கே என கேட்டதாகவும் அப்போது வேன் ஓட்டுநர் முருகன் இறந்த நிலையில் இருந்தாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் நகர காவல் நிலையம் முன்பு நூற்றுக்கு மேற்பட்டோர் குவிந்தனர்.

SankaranKovil

பின்னர் அங்கிருந்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமால் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்தது. இதனையடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் போராட்டம் நடத்தி வருவபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து மாற்று பாதையில் விடப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். இதனைத் தொடர்ந்து இறந்த ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பின்னரே உறவினர்கள் காவல்துறை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்ததை கைவிட்டு களைந்து சென்றனர்.

EPS

மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் என தெரிய வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவலர் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக சார்பில் அந்த குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் ஓட்டுநர் முருகன் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

From around the web