மிரண்டு ஓடிய ரேக்ளா மாடுகள்.. டூவிலர் மீது மோதி விபத்து.. கணவர் முன்னே துடிதுடித்து பலி!! வைரல் வீடியோ

 
Coimbatore

கோவையில் ரேக்ளா வண்டி மாடு மிரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், கணவன் கண்முன்னே மனை​வி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (32). இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்கள் நேற்று மாலை வண்டிக்காரனூர் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கு முன் ரேக்ளா வண்டி ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.

dead-body

இந்த நிலையில், மாடு திடீரென மிரண்டு எதிர் சாலைக்கு திரும்பியதால் பின்னால் வந்த இவர்களது வாகனம் அந்த மாட்டுவண்டியின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பிரகாஷ் மற்றும் புவனேஸ்வரி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அதேசமயம், எதிர் சாலையில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றும் விபத்துள்ளானது. இதில் புவனேஸ்வரிக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில்  தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளிவந்து காண்போரை இதயம் கனக்க செய்கின்றது.

From around the web