மஞ்சுவிரட்டு போட்டியில் 13 சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழப்பு.. சிராவயலில் சோகம்!

 
shiravayal

சிராவயலில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியில் 13 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதேபோல் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே சிராவயல் கிராமத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டி மிகவும் புகழ் பெற்றதாகும்.

boy-dead-body

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மஞ்சுவிரட்டு போட்டி சிராவயலில் இன்று காலை 10.30 மணியளவில் அங்குள்ள ஜல்லிக்கட்டு திடலில் தொடங்கியது. இந்த போட்டியை வேடிக்கை பார்க்க வலையபட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (13) என்ற சிறுவன் வந்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த நிலையில், அடையாளம் தெரியாத 35 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Police

கடந்த ஆண்டு சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 2 பேர் உயிரிழந்தனர். பெரிய காயங்களுடன் 73 பேரும், சிறு காயங்களுடன் 150 பேரும் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web