ஐந்து வீடு அருவியில் குளித்த 2 கல்லூரி மாணவர் பலி.. கொடைக்கானலில் சோகம்!

 
kodaikanal

கொடைக்கானல் ஐந்து வீடு அருவி பகுதியில் குளித்தபோது காணாமல்போன 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்தவர் நாசர். இவரது மகன் நசீர் (21). ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்தவர் காா்த்திக் மகன் கோகுல் (21). நண்பா்களான இருவரும் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக கொடைக்கானல் திரும்பினா்.

swim

இந்த நிலையில் நசீா், கோகுல் ஆகிய இருவரும் கோவை கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் சிலருடன் ஐந்து வீடு பகுதியிலுள்ள அருவிக்குச் சென்று குளித்தனா். அங்கு அருவிக்கு அருகேயுள்ள ஆழமான பகுதிக்குச் சென்ற நசீரும், கோகுலும் நீண்ட நேரமாகியும் காணவில்லை.

தகவலின் பேரில் சம்பவ இடத்த்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், கொடைக்கானல் போலீசார் மாணவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து மாயமான கல்லூரி மாணவா்களைத் தேடும் பணி இன்று ( ஜன.17) மீண்டும் தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Police

இந்நிலையில் இன்று காலை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், சேத்துப்பாறையை சேர்ந்த கிராம மக்கள் தேடி வந்த நிலையில் நசீர், கோகுல் ஆகிய இருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web