த.வெ.க கட்சியின் செயலி அறிமுகம்.. 2 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்

 
TVK

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை யாருக்கும் ஆதரவும் இல்லை சட்டமன்ற தேர்தலே இலக்கு என்று அறிவித்த விஜய், தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணியை சமீபத்தில் அறிவித்தார்.

TVK

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலியை நடிகர் விஜய் நேற்று முன்தினம் அறிமுகம் செய்து வைத்ததுடன், முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். இதையொட்டி அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடன் இணைந்து மக்கள் பணி செய்ய விரும்புவோர், எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். பிடித்திருந்தால், விருப்பப்பட்டால் நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணையுங்கள். சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைப்போம்” என்று பேசியிருந்தார்.

TVK

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் இணையவதற்கான லிங்குகளை தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் கொடுத்திருந்தனர். இதனையடுத்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மளமளவென குவிந்தது. அதிகமான நபர்கள் அந்த செயலியில் குவிந்ததால் சில நேரங்களில் செயலியனாது ஸ்தம்பித்தது. உறுப்பினர் சேர்க்கை செயலி தொடங்கப்பட்டதில் இருந்து 50 லட்சம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

From around the web