ஓடும் ரயிலில் மாணவியிடம் அத்துமீறிய டி.டி.ஆர்.. போலீசார் தீவிர விசாரணை!

 
Sex

ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பிய மாணவியை டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் செங்கன்னூர் அருகே உள்ள வடக்கேதி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர், கர்நாடகா மாநிலம் பனாஸ்வாடியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இவரது பாட்டி இறந்ததால் சொந்த ஊருக்கு செல்ல பெங்களூரு - கன்னியாகுமரி ஐலேண்ட் எக்ஸ்பிரசில் நேற்று முன்தினம் ஏறியுள்ளார்.

Rape

அப்போது முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொண்டு எஸ்-7 பெட்டியில் ஏறி உள்ளதை அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் அபராதம் விதிக்கப்போவதாக அந்த மாணவியிடம் கூறியுள்ளார். அப்போது பணம் குறைவாக இருப்பதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் ஏசி பெட்டியில் சீட் ஒதுக்கி தருவதாக கூறி ஆள் இல்லாத ஏசி பெட்டிக்கு அழைத்து சென்று மாணவிக்கு டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

அப்போது ரயில், திருப்பத்தூருக்கும் சேலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே டிக்கெட் பரிசோதகர், அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள், ரயில்வே போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்துள்ளது.

Police

அப்போது சேலம் ரயில்வே போலீசார், அந்த மாணவியை மீட்டு விசாரிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றது. மாணவியும், அந்த ரயிலில் தொடர்ந்து பயணித்து செங்கானூருக்கு சென்றுவிட்டார். இதையடுத்து நேற்று மதியம், ஆன்லைன் மூலம் சேலம் ரயில்வே போலீசாருக்கு புகார் மனுவை மாணவி அனுப்பி வைத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டிக்கெட் பரிசோதகரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

From around the web