நம்புங்க.. இதுல அரசியல் இல்லை! அண்ணாமலை விளக்கம்!!

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு ஒன்றிய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டாரா? அல்லது அவருடைய நடவடிக்கைகளை கண்காணிக்க ஒன்றிய அரசே வலிந்து ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளதா என்ற கேள்விகள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அலசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
”அச்சுறுத்தல் இருக்கிறது என தகவல் வந்ததன் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு தருவது போல தவெக தலைவர் விஜய்-க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஏன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை? பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும். இதில் அரசியல் கிடையாது." என்று அண்ணாமலை கூறியுள்ளார்.