வாக்குச்சீட்டுக்கு மாறும் ட்ரம்ப்! மோடியும் மாறுவாரா?

 
trump modi

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வணிகம், பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பம் உள்ளிட்டவைகளில் இரு நாடுகளும் எவ்வாறு தொடர்ந்து பணியாற்றலாம் என்றவாறு பேச்சுவார்த்தை நடந்தது.

சந்திப்பின் இறுதியாக இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி இந்தியிலும் அதிபர் ட்ரம்ப் ஆங்கிலத்திலும் பதிலளித்தனர். பிரதமர் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒருவரும், அதிபர் பேசுவதை இந்தியில் மொழிபெயர்க்க மற்றொருவரும் பின்னால் அமர்ந்து உதவி செய்தனர்.

பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் 2020 மற்றும் 2024ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் 2024ம் ஆண்டு இந்தியத் தேர்தல் குறித்து அதிபர் ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்டது. 2020ல் தேர்தல் சரியாக நடக்கவில்லை. ஆனால் 2024ல்  பெரும் வெற்றியைப் பெற்றோம். அனைத்து போட்டி மாநிலங்களிலும் வெற்றியைப் பெற்றோம். மக்கள் செல்வாக்கை பெரும் வித்தியாசத்தில் பெற்றோம். தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டியதுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ஒரே நாளில் மட்டும் வாக்குப் பதிவு, வாக்குச்சீட்டு என்ற முறைகளைப் பரிசீலிக்கிறோம் என்று பதிலளித்தார்.

அதிபர் ட்ரம்ப்பின் ஆங்கிலப் பதிலை பின்னால் இருந்த பெண்மணி உடனுக்குடன் இந்தியில் மொழிபெயர்த்து பிரதமர் மோடிக்குச் சொன்னார். வாக்குச்சீட்டு என்று ட்ரம்ப் சொன்னதையும் அவர் சொல்லியிருக்க வேண்டும். இந்தியாவில் வாக்கு எந்திரங்களில் மோசடி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அமெரிக்காவில் மீண்டும் வாக்குச்சீட்டை அறிமுகப்படுத்த வேண்டும் என்று, பிர்தமர் மோடியை வைத்துக் கொண்டே அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடத்தும் அதிகாரம் மாவட்ட (கவுண்டி) ஆட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். நாடு முழுவதும் பல கவுண்டிகளில் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், சில கவுண்டிகளில் இன்னமும் வாக்குச்சீட்டு நடைமுறையில் உள்ளது. மீண்டும் வாக்குச்சீட்டுகே முழுமையாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபரே கூறியிருப்பது வாக்கு எந்திரங்களில் மோசடிக்கு பெரும் வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது. ஆனானப்பட்ட அமெரிக்காவே வாக்குச்சீட்டுக்கு மாறத் துடிக்கும் போது இந்தியாவும் மாறுவது தானே சரியானதாக இருக்கும்!

From around the web