டெல்லி பயணம்.. உற்சாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
Stalin Stalin

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏளனமாக விமர்சனம் செய்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

டெல்லி பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தயாராகிவிட்டார். இது குறித்து உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

”டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்! ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை! டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது!

பகல்ஹாம் தாக்குதல் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்! நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினேன்! தமிழ்நாட்டின் நலன் காத்திடவும் - மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் களம் 2026-க்கு ஆயத்தமாக ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களைச் சந்திக்க நான் ரெடியாகிவிட்டேன்… நீங்கள்?” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

From around the web