காய்ச்சலால் பயிற்சி பெண் மருத்துவர் பலி.. திருவாரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

 
Tiruvarur Tiruvarur

திருவாரூரில் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிந்து, அதே மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Fever

அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என்று முடிவுகள் வந்துள்ளது. மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்னர் நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் திடீரென உயிரிழந்ததற்கான காரணம் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் கூறும்போது, “பயிற்சி மருத்துவர் சிந்து காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது எந்த வகையான காய்ச்சல் என்பது பற்றி அறிவதற்காக அவருக்கு டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்தும் எதிர்மறையாக இருந்தது.

dead-body

பயிற்சி மருத்துவர் சிந்துவுக்கு 5 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு வந்திருந்தது டைபாய்டு வகை காய்ச்சலாக இருக்கும். அவர் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது பற்றி அறிய அவரது ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

From around the web