முற்றிலும் தவறான செய்தி.. ரூ.2,000 நோட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

 
Tasmac

டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க தடை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அன்று நள்ளிரவு முதல் நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அந்த பணத்தை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் இருந்ததால் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அதன்பிறகு படிப்படியாக நிலை சீரானது. இதனிடையே, சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து மறைந்து வந்தது. சாதாரணமாக 2,000 ரூபாய் நோட்டைப் பார்ப்பதே அரிதாக மாறியது.

வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்காக 2000 கோடி ரூபாய் ! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!

இந்த நிலையில் தான் நேற்று இரவு ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நிலை வந்துள்ளது.

இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவேடாஸ்மாக்கிற்கு மதுபானம் வாங்க வருபவர்களிடம் ரூ. 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

Senthil

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்க தடை இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

From around the web