நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

 
Leave

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் வேலை நாளாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Exam

அந்த வகையில் நாளை சென்னை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் நாளை திங்கட்கிழமை பாட வேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 13-ம் தேதி அன்று (திங்கட்கிழமை) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதனால் மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்களில் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

Leave

அதன்படி நாளை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். ப்ளஸ் 2, ப்ளஸ் 1 மாணவ - மாணவிகள் பொதுத்தேர்வு எழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

From around the web